September 29, 2020
தண்டோரா குழு
கோவை க.க.சாவடி பகுதியில் ஆபாத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து வேலை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை க.க.சாவடி பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் நீண்ட நாட்களாக சிமெண்ட் உடைந்து கிழே விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்ட் உடைந்து,உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.தற்போது மழை காலம் என்பதால் கம்பம் எப்போது வேண்டுமானும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் உடைந்த பாகங்கள் வழியாக மின்சாரம் கசிந்து கம்பத்தை தொடும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு உடைந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பத்தின் மீது மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து ஏறி வேலை செய்தார்.அதை கண்ட அப்பகுதி மக்கள் கவனமாக இருங்கும் படி கூறியதோடு, உடனடியாக கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தி இன்று மின்கம்பத்தை சீர் செய்து வருகின்றனர்.