• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

April 25, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் மத்திய பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர்.

சேலம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சை நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார், மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நான்கு தமிழக வீரர்கள் இந்த தாக்குதலில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க