• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

January 7, 2019 தண்டோரா குழு

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலை.,யில் தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் பாரதியார் பல்கலை.யில் தொலைதூர கல்வி மையத்தை துவக்க நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை துவக்கியதை எதிர்த்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க