• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயரமான சுவர் குறித்து 1998 ம் ஆண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது -முத்தரசன்

December 4, 2019 தண்டோரா குழு

உயரமான சுவர் குறித்து 1998 ம் ஆண்டே மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்து இருக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

மேட்டுப்பாளையம் நடூரில் வீட்டை விட உயரமாக துணிக்கடை உரிமையாளரின் வீட்டு காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பிரமாண்டமான சுற்றுசுவர் எழுப்பும் போது பில்லர், பெல்ட் போடவில்லை, சிமென்ட் பயன்படுத்த வில்லை. இந்த உயரமான சுவர் குறித்து 1998 ம் ஆண்டே மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்து இருக்கின்றது.

2018 அக்டோபர் மாதம் 13 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி பழனிச்சாமி தலைமையில் சுவரை அகற்ற வேண்டும் என 60 பேரிடம் கையெழுத்து பெற்று மனு கொடுக்கப்பட்டது.

சுவர் குறித்து புகார் எதுவும் வந்ததாக தெரியவில்லை என நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றார். அவர், அரசின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்தாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு , இதை அவர் அரசியலாக்குவதாக முதல்வர் பேசியிருக்கின்றார்.எதிர் கட்சிதலைவருக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க கூடாது என கூறிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனு மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.

உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என தெரிவித்த அவர்,இதற்கு காரணமான நகராட்சி ஆணையர்,வட்டாச்சியர் உட்பட காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.பாதிப்பிற்கு காரணம் சிவசுப்பிரமணியம் மட்டுமல்ல,அரசு நிர்வாகமும் காரணம் என தெரிவித்த அவர்,போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தது மோசமான செயல் எனவும் ,தடியடி நடத்த காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காவல் துறையும், வருவாய்துறையும் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் எரியூட்டுவது என்பது ஏற்புடைவதல்ல எனவும் இது போன்ற செயல்கள் சர்வாதிகார ஆட்சியில்தான் நடக்கும் எனவும் தெரிவித்தார்.நடூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனியின் அருகில் இருக்கும் ஓடையை மறித்தும் சுவர்கள் கட்டப்பட்டு இருக்கின்றது என கூறிய அவர், ஓடையை மறித்து எழுப்பபட்டுள்ள சுவர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நெருக்கடியால் தொழில் முனைவோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது.
எப்படியாக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என ஆளும்கட்சி விரும்புகின்றது. அதற்காக குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, முதல்அமைச்சர் பழனிச்சாமியின் ஆணைக்கு இணைங்க செயல்படுகின்றார்.புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக போட்டுள்ள வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் பட்சிக்கு முழு உடன்பாடு என தெரிவித்த அவர், திமுக தேர்தலை தடை செய்ய சொல்ல வில்லை, குளறுபடிகளை சரிசெய்து விட்டு தேர்தலை நடத்த சொல்கின்றது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க