• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா

July 7, 2021 தண்டோரா குழு

ஈஷா சார்பில் 300 உயர்தர BiPAP non-invasive ventilators மற்றும் 18 லட்சம் KN 95 முக கவசங்கள் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று (ஜூலை 6) வழங்கப்பட்டது.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக செயல்படும் விதமாக இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 300 BiPAP non invasive ventilators மற்றும் 18 லட்சம் KN-95 முகக்கவசங்களை Isha Outreach – Covid Action சார்பில் நட்சத்திரா, தினேஷ் ராஜா ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, இதேபோல் கடந்த மே மாதம், 500 Oxygen Concentrators, பி.பி.இ கிட்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. இது தவிர்த்து, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா நேரடியாக செய்து வருகிறது.

கோவையில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது மற்றும் மருத்துவம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன் களப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.மேலும்,பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மின் மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இலவசமாக தகனம் செய்யப்படுகிறது.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ‘சிம்ம க்ரியா’ போன்ற எளிய யோகா பயிற்சிகளை உலகில் உள்ள பல லட்சம் மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது

மேலும் படிக்க