• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதயசூரியன் உதித்த பிறகுதான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது – முக ஸ்டாலின்

March 22, 2019 தண்டோரா குழு

உதயசூரியன் உதித்த பிறகுதான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்தள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அரசியல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. இதற்கிடையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

திமுக ஆட்சியில் தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க உதயசூரியன் சின்னம் தான் வாய்ப்பு அளித்தது. அரசு மருத்துவ கல்லூரிகளை மாநிலத்தின் பல மாவட்டங்களில் துவக்கியது திமுக ஆட்சி தான். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஆனால் தாங்கள் ஊழலி்ல் திளைக்காதவா்கள் போல பிரதமரும், முதல்வரும் மக்களை மாறி மாறி ஏமாற்றி வருகிறது. பேரத்தின் அடிப்படையில் தான் எதிரணியின் கூட்டணியே அமைந்துள்ளது.

மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். ஊழல் மற்றும் கொலை குற்றச்சாட்டிற்கு ஆளாகி இருப்பவர் தற்போதைய முதல்வர் பழனிசாமி. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். நான் தான் கடவுள் என்னும் பழனிசாமிக்கு, மணி அடிக்கும் பூசாரியாக ராமதாஸ் மாறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் கீழ்தரமாக அதிமுகவை வசைபாடிவிட்டு தற்போது அந்த கட்சியுடனே ராமதாஸ் கூட்டணி சேர்ந்துள்ளார் .

திமுக ஆட்சிக்கு வந்தால் 5 மாவட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும். ஜெயலலிதா மீதான ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போராடிய பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என பேசியுள்ளார்.
மேலும், சேலத்தில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்படும். ஏற்கனவே உள்ள சென்னை – சேலம் சாலை மேம்படுத்தப்படும். சேலத்தில் இரவில் விமானம் தரையிறங்க வசதி செய்யப்படும். மேலும் மத்திய அரசு வேலைகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர திமுக வலியுறுத்தும் என்றார்.

மேலும் படிக்க