• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் 121-வது மலர்கண்காட்சி

May 19, 2017 தண்டோரா குழு

121-வது மலர்கண்காட்சி இன்று உதகையில் தொடங்கியது . தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மலர் கண்காட்சியை திறந்து வைத்தார்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாவரவியல் பூங்காவில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 121-வது மலர்கண்காட்சி இன்று தொடங்கியது.

இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. உதகை மலர் கண்காட்சி உலக அளவில் புகழ் பெற்றது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள், இந்த மலர் கண்காட்சியில் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை இன்று திறந்து வைத்தார். இந்த ஆண்டு மலர்கண்காட்சியில் சிறப்பம்சமாக ஒரு லட்சத்தி 20 ஆயிரம் கொய் மலர்களை கொண்டு மாமல்லபுரம் கடற்கரை சிற்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது சுற்றலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

உலகத்தில் உள்ள 17 நாடுகளில் வளரும் மலர்கள் 15 ஆயிரம் தொட்டியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் படி மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் அனைத்து குன்னூர் வழியாக வர வேண்டும் , உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும்.மலர் கண்காட்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க