• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி காலமானார்

June 16, 2017 தண்டோரா குழு

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி இன்று டெல்லியில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடிய அவர்,1960-ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

பகவதி மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“பி.என்.பகவதியின் இறப்பு பெரும் சோகத்தை கொடுக்கின்றது. அவரின் செயற்பாட்டால் இந்திய நீதித்துறை சுலபமாக அணுகக்கூடிய வகையில் மாறியது”.

என்று ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க