• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் – பாடகி சின்மயி மனு

May 8, 2019 தண்டோரா குழு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என பாடகி சின்மயி காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மீடூ புகாரை அடுத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் அனுமதிக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ரஞ்சன் கோகாயை எதிர்த்து சென்னையில் போராட்டம் ஒன்றை நடத்தை அனுமதி அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க