• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் மீன் மொத்த வியாபாரம் மார்க்கெட் அதிகாலை 5 மணிவரை மட்டுமே இயங்கும்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் லாரிபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மொத்த வியாபாரம் மார்க்கட் இன்று முதல் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு பலகை மீன் மார்க்கட் முன் வைக்கப்பட்டது.

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கடுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில். தற்பொழுது 144 தடை உத்திரவு நடைமுறையில் இருந்தாலும் அரசு சில தளர்வுகளை அறிக்கப்பட்டு. சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களை பயன்படுத்தி தங்கள் தொழில்களை தொடர அனுமதி அளித்துள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை மொத்தம்,மற்றும் சில்லரை விற்பனை கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதனால் வியாபாரிகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்த நிலையில் சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்தவர்கள்.கோவிட் -19 பரவல் அச்சத்தால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.அதன் விளைவாக மீண்டும் கோவையில் கொவிட் -19 தொற்று பரவும் அச்சம் பலரிடமும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தனிமனித விலகல், மற்றும் முகக்கவசம், போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத வர்த்தக நிறுவனங்கள்,மார்க்கட், மற்றும் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து. கோவை மொத்த மீன் விற்பனையாளர்கள். சார்பாக கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிப்பு பலகயை வைத்துள்ளார்கள். கோவையில் செயல்பட்டு வந்த மீன் மொத்த விற்பனையானது. இன்றுமுதல் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே விபாரிகளும், பொதுமக்களும் மீன்களை வாங்கி செல்லமுடியும்.என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறியாத பலரும் மீன் வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்புவதை பார்க்க முடிந்தது. மேலும்உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லறை மீன் விற்பனை மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பாக சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க