June 10, 2020
தண்டோரா குழு
உக்கடம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்கள் தனிமனித இடைவெளியில்லாமல் கூட்டமாக அத்தியவாசிய பொருட்களை வாங்க கூடுவது வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த ஞாயிறன்று திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க கூடியதை அடுத்து தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தியது.
இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஆகியோர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டனர்.