July 18, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் அருகே வியாபாரி போல் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி, சத்தம் போட்டதால் பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை உக்கடம் அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் நிஜாம். பிளக்ஸ் டிசைன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிஜாம் வீட்டின் அருகே புர்கா (இஸ்லாம் பெண்கள் ஆடை)விற்பனை செய்ய மர்ம நபர் ஒருவர் வந்ததாக தெரிகிறது.நிஜாமின் மனைவியிடம் பேச்சு கொடுத்தவாறு திடிரென கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.அப்போது துதாரித்துக்கொண்ட அவர் செயினை பிடித்தவாறு சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் வைத்திருந்த ஆயுதத்தால் பெண்ணை தாக்கி உள்ளார். இதனிடையே அங்கிருந்தவர்கள் ஓடி வந்ததால் , நிஜாமின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பின் வாசல் வழியே தப்பியோடியுள்ளார். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக உக்கடம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.