• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈ பாக்ஸ் கல்லூரிகளின் இரண்டாவது ஸ்டார்டப் ஸ்டுடியோ துவக்கம்

September 7, 2020 தண்டோரா குழு

ஈ பாக்ஸ் கல்லூரிகள் சார்பாக இரண்டாவது ஸ்டார்ட் அப் ஸ்டுடியோ “அக்ரிகேட்” ஆன்லைன் முறை மூலம் தொடங்கப்பட்டது.

இந்த ஸ்டுடியோவின் சிறப்பு என்னவென்றால், இ பாக்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் இந்நிறுவனத்தை வடிவமைத்து வருகின்றனர். மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் விவசாய உள்கட்டமைப்பை வடிவமைக்கின்றனர்.

மின்னனு மற்றும் இ.சி.இ மாணவர்கள் விவசாய ஆட்டோமேஷனை வடிவமைக்கிறார்கள் மற்றும் கணினி அறிவியல் மாணவர்கள் தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலியை வடிவமைத்துள்ளனர்.குமரகுருபரன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்,10 மாணவர்கள் பங்குதாரர்களாகவும் இருப்பார்கள். “அக்ரிகேட்” என்பது தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட விவசாய நிறுவனமாகும் எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த நிருவனம் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவு பயிர் சாகுபடியைக் கையாண்டு விஷமற்ற உணவை உற்பத்தி செய்ய உதவுகிறது.

ஸ்டார்ட்அப் ஸ்டுடியோவை அக்ரிகேட் தலைமை நிர்வாக அதிகாரியும் காக்னிசான்ட் முன்னாள் இயக்குனறுமான,குமரகுருபரன், திறந்து வைத்தார். தனது தொடக்க உரையில், “இந்த நிறுவனத்தில் அனைத்து யோசனைகளும் கருத்துகளும் மாணவர்களால் கருத்தரிக்கப்படுகின்றன.கருத்து, தயாரிப்பு மேம்பாடு, முறை மற்றும் இறுதி தயாரிப்பு அனைத்தும் மாணவர்களால் செய்யப்படும். இதற்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும் ஆம்ஃபிசாஃப்ட் நிருவனம் வழங்கும்.இயற்கை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் மற்றும் உள்ளூர் உணவு மேம்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில், விவசாயம் என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும், நமது உணவு தேவை அதிகரித்து வருகிறது.

அடுத்த இருபது ஆண்டுகளில் 50% அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.மூன்று நகரங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் ஆரம்ப கட்டத்தில் உருவாக்கப்படும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்ககள் உருவாக்கப்படும். இந்த நிறுவனம் உருவாக்கப்படுவதில் மாணவர்களுக்கு 20% பங்கு கிடைக்கும்.

தலைமை கற்றல் அதிகாரி டாக்டர் பாலமுருகன், கூட்டத்தை வரவேற்றார்.ஸ்டார்ட்அப் ஸ்டுடியோவின் பின்னால் உள்ள தனது நோக்கத்தை பகிர்ந்து கொண்ட தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி ஆம்பிசோஃப்ட் டாக்டர் பிரதீப் குமார், தேசத்தின் பொருளாதாரத்துடன் இணைந்த உணவு உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் சிறப்பை பற்றி கூறினார்.

இ-பாக்ஸ் கல்லூரிகளின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஸ்டார்ட்அப் ஸ்டுடியோவுக்கு இ பாக்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த பத்து மாணவர்கள் தேர்வு செய்தார்கள். பதவியேற்பின் போது நான்கு பெயர்கள் அறிவிக்கப்பட்டன.(மாசன் 2ம் ஆண்டு அக்ரி, விஷ்ணுபிரியா இறுதி ஆண்டு. அக்ரி, புவனேஸ்வரி 2 வது ஆண்டு மற்றும் கௌஷிகா மூன்றாம் ஆண்டு).
முனைவர் உதையகுமார் முதல்வர் கதிர் பொறியியல் கல்லூரி நன்றி கூறினார்.

மேலும் படிக்க