• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு

May 13, 2025 தண்டோரா குழு

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் மஹதி அகுவவீதி அவர்கள், ஐநா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ‘இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு’ உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகள் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் மையப் புள்ளியாக பணியாற்றுவார்.

UNCCD இளைஞர் கூட்டமைப்பு (UYC) என்பது பாலைவனமாதல், நில வளம் சீர்கேடு மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கும் நீடித்த நிலையான நில பயன்பாடு தொடர்பாக செயல்படுவதற்கான உலகளாவிய தளமாகும். இது இளைஞர்களுக்கு UNCCD செயல்முறைகளிலும், முக்கிய பலதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் குரல் கொடுக்க வழிவகுக்கிறது.

மஹதி அவர்கள் இவ்வமைப்பின் தலைமைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதன் மூலம், சர்வதேச அளவில் பூமி மற்றும் மனித ஆரோக்கியத்தின் முக்கியமான அம்சமாக ‘வளமான மண் மற்றும் விவசாயம்’ அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அவர் செயல்பட உள்ளார்.

இதனுடன் உலகளாவிய கொள்கைகள் மூலம் இயற்கையோடு இணைந்து விவசாயத்தை மேற்கொள்ளும் வேளாண்-பயிரியல் நடைமுறைகளை பிரதானமாக்குவதை தனது முன்னுரிமையாக கொண்டு செயல்படுவார்.

இந்த பொறுப்பு குறித்து மஹதி கூறுகையில் “நமது மண்ணின் ஆரோக்கியம், பூமி மற்றும் நமது சமூகங்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. இந்தப் பொறுப்பின் மூலம், மண் வள மேம்பாட்டிற்கு உடனடியாகத் தேவைபடும் கவனத்தையும் வளங்களையும் பெறுவதை உறுதி செய்ய, உலகளவில் இளைய தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.” எனக் கூறினார்.

மஹதி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சர்வதேச வளர்ச்சி துறையில் நிலைத்தன்மை, பொது சுகாதாரம், அகதிகள் ஆதரவு ஆகியவற்றில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

தற்போது மண் காப்போம் இயக்கத்தின் கொள்கை மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மண் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் முயற்சிகளுக்கான கொள்கை மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், மற்ற அமைப்புகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை உருவாக்குவதிலும் அனுபவம் கொண்டவர்.

மேலும் படிக்க