• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷா சார்பில் மன அழுத்தத்தை குறைக்க கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு

June 16, 2022 தண்டோரா குழு

குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும் சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன்படி,சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் என பல்வேறு இடங்களில் உள்ள ஆண்களுக்கான மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் என 26 சிறைகளில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறை வார்டன்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’ என்ற 3 நாள் யோகா வகுப்பை நடத்தினர். இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இவ்வகுப்புகள் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு. சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் மே 30-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிறை கைதிகளுக்கு இதுபோன்ற இலவச யோகா வகுப்புகளை கடந்த 30 வருடங்களாக ஈஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க