September 21, 2017
தண்டோரா குழு
ஈரானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் அட்ரிபியல் மாகணத்தில் 7 வயது சிறுமியை 42 வயது இஸ்மாயில் என்ற கொடூரன் அவளை கற்பழித்து கொலை செய்தான்.இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் முடிவில், இஸ்மாயில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டான்.இந்நிலையில்
இஸ்மாயிலுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.
மேலும், பொதுமக்கள் முன்னிலையில் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், ஈரானில், இதே போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.