• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இ.பாஸ் நடைமுறையில் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு !

August 14, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இ.பாஸ் நடைமுறையில்
தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில்,பொதுமக்கள் சிரமப் படுவதால் இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில்,தற்போது விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் கிடைக்கும். ஆதார் அல்லது ரேஷன்,அட்டை நகல்,தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் என இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் ஆக.17 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க