• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவிற்கு கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்

February 13, 2018 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேர் இஸ்ரோவிற்கு இரண்டு நாட்களுக்கு கல்வி சுற்றுலா சென்று உள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ்,அரசுப்பள்ளி மாணவர்களை இஸ்ரோவிற்கு கடந்த ஆண்டு அழைத்து சென்றனர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக கோவையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களை இன்று இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.

இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிகள் மற்றும் விஞ்ஞானிகளை மாணவர்கள் நேரடியாக சந்திக்க உள்ளனர். இரண்டு நாட்களுக்கு செல்லும் இந்த சுற்றுலாவில் 6 ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்து செல்கின்றனர்.மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள கல்வியறிவு மட்டுமல்லாத வெளி உலகில் நடக்கும் நடைமுறை கல்வியினையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் அமைய உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க