• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் – பிரகாஷ் ஜவடேகர்

August 24, 2019 தண்டோரா குழு

வனப்பகுதிகளை ஓட்டி இருக்கும் பகுதிகளில் கனிமவளங்கள் சுரண்டப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது எனவும், இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் மாபியா கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி கூடத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று திறந்து வைத்தார். பின்னர் சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் மிகவும் முக்கிய பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் இயற்கை நேசிக்கக்கூடியவர்கள். அதற்கு சில அச்சுறுத்தல்கள் உள்ளது. அதன் சார்ந்த ஆராய்ச்சியை இந்த மையம் செய்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1000ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 2021ல் உலக இடம்பெயர் பறவைகள் மாநாடு இந்தியாவில் நடத்த உள்ளோம். தற்போது மக்களிடையே பறவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,புலியின் பெருக்கத்தை இரட்டிப்பாக்கி உள்ளோம். 2023க்குள் அதை இரட்டிப்பாக்குவோம்.யானைகளின் எண்ணிக்கை 30,000மாக இருக்கின்றது. வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க நிதி வழங்கப்பட உள்ளது.இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் வருவது தடுக்கப்படும். வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், மாபியா கொள்ளை தடுக்கப்படும்.

மேலும் படிக்க