November 7, 2017
தண்டோரா குழு
மயிலாப்பூரில் இருக்கும் சில அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி தான் மோடி கருணாநிதியை சந்தித்திருப்பார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.
தினத்தந்தி பவளவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்ற மோடி கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி,
மயிலாப்பூரில் இருக்கும் சில அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி தான் மோடி கருணாநிதியை சந்தித்திருப்பார். இது மோடியின் யோசைனையாக இருக்காது. ஏன் என்றால் மோடியின் மனப்பான்மை எப்படியானது என்று எனக்கு தெரியும். இதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு கிடையாது என்றார்.
மேலும், மோடி – கருணாநிதி சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் இருக்காது என்றும் இதனால் 2ஜி தீர்ப்பிலும் மாற்றம் இருக்காது என்றும் சுப்ரமணியன்சா’மி கூறினார்.