• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த மகாராஷ்டிரா முதலமைச்சர்

May 27, 2017 தண்டோரா குழு

புனேவின் அவுரத் ஷாஅஜானி கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் இலவச கணினி மையம் திறக்கப்பட்டது. இளைஞர்களின் இந்த முயற்சிக்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரா பாட்னாவிஸ் பாராட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அவுரத் ஷாஅஜானி என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் மக்கள் தண்ணீருக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அங்கு உள்ள இளைஞர்கள், Digital Rural Connect என்னும் மின்னணு இணைப்பை பயன்படுத்தி, இலவச கணனி மையத்தை திறந்துள்ளனர். இதனால் அக்கிரமத்தில் பலர் பயனடைந்துள்ளனர்.

இந்த மையத்தின் மூலம், அங்கு வசிக்கும் மக்கள், திரைப்படத்திற்கு டிக்கெட் பதிவு செய்ய, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க மற்றும் பொது சேவைக்கும் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள மாணவர்கள் தங்களுடைய கல்விக்கு தேவையான தகவல்கள், வேலை வாய்ப்பு சம்பந்தமாக தகவல்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள இந்த மையம் உதவியாக இருக்கிறது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரா பாட்னாவிஸ் இளைஞர்களை பாராட்டி, வெளியிட்ட அறிக்கையில்,

“ இது போன்ற திட்டங்களின் வெற்றிக்கு பொது மக்களின் ஈடுபாடு அதிகமாக உதவுகிறது. இதை மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும். இன்று நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு உள்ளது.” என்றார்.

மேலும் படிக்க