• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞரின் உயிரை காப்பற்றிய கண்பார்வையற்ற இளைஞர்

September 7, 2017 தண்டோரா குழு

மும்பை ரயில் நிலையத்தில் ரயிலிருந்து கீழே விழுந்த நபரை கண்பார்வையற்ற இளைஞர் காப்பாற்றியுள்ளார்.

மும்பையின் கல்யாண் நகரில் வசித்து வரும் கண்பார்வையற்ற இளைஞர் சலீம்.இவர் தாதர் ரயில் நிலையத்தில் புலாங்குழல் வாசித்து, தன் வாழ்நாளை கழித்து வந்தார். அவர் கடந்த திங்கள்கிழமை மதியம் சுமார் 3.45 மணிக்கு மதிய உணவை வாங்க பிளாட்பாரம் 5க்கு வந்தார்.

அப்போது, திடீரென யாரோ ஒருவர் கீழே விழுந்த சத்தம் கேட்டுள்ளது.உடனே அங்கு என்ன நடந்தது என்று விசாரித்தார். ரயிலிருந்து கீழே ஒருவர் விழுந்து விட்டார் என்று உணவு வழங்கும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கீழே விழுந்தவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.இச்சம்பவத்தை கண்பார்வை இல்லவிட்டாலும் தனது செவி திறனால், சலீம் அறிந்துக்கொண்டார்.

இதனையடுத்து தாதர் ரயில்வே காவல்நிலைய அதிகாரிக்கு சலீம் தகவல் தந்தார். தகவல் அறிந்த அவர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கீழே விழுந்து கிடந்த வரை தூக்கி கொண்டு, ரயில்வே அவரச அறைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பிறகு, அருகிலிருந்த சியோன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அடிபட்ட அவரின் பெயர் பாபுராம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் தகவல் தந்து, பாபுராமின் உயிரை காப்பாற்றிய சலீமை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் படிக்க