• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் படையுடன் ஜிம்பாப்வே கிளம்பும் தோனி.

May 23, 2016 தண்டோரா குழு

ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் ஜூன் மாதம் 11ம் தேதி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இந்திய அணி.

இதற்கான அணி விவரம் இன்று வெளியிடப்பட்டது. அதில் முக்கிய வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு தோணி தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல், ஃபைசல், மணிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பாட்டி ராயுடு, ரிஷி தவாண், அக்சார் படேல், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்னி, பூம்ரா, பரீந்தர் ஸ்ரான், மந்தீப் சிங், கேதர் யாதவ், ஜயதேவ் உனத்கட், சாஹல் ஆகியோர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து,ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதற்கு, விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, சாஹா, அஷ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், தாகுர், பின்னி, அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க