• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச வைபையை கண்டுப்பிடிக்க பேஸ்புக் புதிய வசதி

July 6, 2017 தண்டோரா குழு

இலவச வைபை எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை பேஸ்புக் கண்டுபிடிக்க உதவு புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் பள்ளி மாணவ மாணவிகள் முதல் வயதானோர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் பேஸ்புக் பயனர்கள் 2௦௦ கோடி என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது, பேஸ்புக்கை பயன்படுத்தி இலவச வைபை இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கும் முறையை அறிவித்துள்ளது.

உங்களுடைய டேட்டா குறைவாக இருக்கிறது அல்லது உங்கள் மடிகணினியை உபயோப்படுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பேஸ்புக் ஆப்பை பயன்படுத்தி உங்கள் அருகில் இருக்கும் இலவச வைப்பை இடங்களில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

கடந்த 2௦16ம் ஆண்டு, இந்த வசதியை சில நாடுகளில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது உலகெங்கிலும் இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க