• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை சென்றார் மோடி

May 11, 2017 தண்டோரா குழு

இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார்.

உலகம் முழுவதும் புத்தரின் பிறந்தநாளை ‘புத்த பூர்ணிமா’ விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் புத்தர் ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகியவையும் புத்த பூர்ணிமாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா இலங்கையில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.

இலங்கையில் நடக்கவுள்ள இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க