• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு – கோவையில் திராவிடர் தமிழர் கட்சியினர் கைது

November 29, 2019 தண்டோரா குழு

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். இன்று டெல்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் கோத்தாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.உடலில் கட்டுப்போட்டு கோத்தபய இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது திராவிடர் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர்.

அப்போது இலங்கையில் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட முயன்ற 20 க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க