• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !

April 30, 2019 தண்டோரா குழு

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்கி அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புபொறுப்பேற்றுள்ளது. இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் அந்நாட்டு அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியது.

இதற்கிடையில்சமூகவலைதளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 8 நாட்களுக்கு பிறகு இலங்கையில் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க