• Download mobile app
07 Apr 2026, TuesdayEdition - 3709
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் உள்ள 51 தமிழக மீனவர்கள் விடுதலை

January 6, 2017 தண்டோரா குழு

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்படை , மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்தியா இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பெரும் ஓரிரு நாட்களில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தமிழக மீனவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க