• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையின் முன்னாள் பிரதமர் மறைவு

December 28, 2016 தண்டோரா குழு

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயக (83) செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 27) காலமானார்.

இலங்கை நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த விக்ரமநாயக உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவில் டிசம்பர் 21ம் தேதி சேர்க்கப்பட்டார்.

முதல் இலங்கை அமைச்சராக 1970ம் ஆண்டு முக்கிய பதவிகளில் இருந்தவர் விக்கிரமநாயக. இலங்கையின் பிரதமராக 2௦௦0ம் ஆண்டு முதல் 2௦௦1 வரையிலும், பின்னர் 2௦௦5 முதல் 2௦1௦ வரையிலும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அவர், 2002ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராகப் பின்னாளில் வருவதற்கு உதவும் வகையில் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகவை அடுத்து பிரதமராக இருந்தார் விக்கிரமநாயக.

அவருடைய மறைவிற்கு அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தனது ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ரத்னஸ்ரீ விக்ரமநாயக மக்களால் அதிகம் விரும்பிய ஒரு தலைசிறந்த தலைவர். அவருக்குப் பிரியமாவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுவோருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இலங்கை முன்னாள் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகவின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க