• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்தவர் ,உயிருடன் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி

June 20, 2017 தண்டோரா குழு

ஆக்ராவில் பாம்பு கடியால் இறந்தவர், வீட்டில் உயிருடன் இருப்பதை கண்ட காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஆக்ராவை சேர்ந்த குஷ் சாராஸ்யா என்பவர் பாம்புக்கடி காரணமாக எஸ்.என் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். அவர்களும் சில தகவல்களை தெரிந்துக்கொள்ள குஷ்சின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால்,அவர் வீட்டில் உயிரோடு இருப்பததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து குஷ்சாராஸ்யா கூறுகையில்,

“பாம்புக்கடி காரணமாக எஸ்.என் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தேன். என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனையிலிருந்து டிச்சார்ஜ் செய்துவிட்டனர்.

நான் இறந்துவிட்டதாக எண்ணி காவல்துறை அதிகாரிகள் சிலர் வீட்டிற்கு வந்து விசாரணை செய்ய வந்த போது,நான் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். நான் உயிரோடதான் இருக்கேன் அப்படிங்கறதுக்கு நிறைய ஆவணங்களை கொடுத்து நம்ப வைக்க வேண்டியதா போச்சு. நான் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தவறாக தகவல் தந்துள்ளனர் என்று அவர்களிடம் தெரிவித்தேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க