• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு உயிர்களை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஆட்டோ ஓட்டுநர்

December 28, 2018 தண்டோரா குழு

டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்த தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற பாலத்தில் இருந்து குதித்து இருவரது உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பவன் ஷா (30 வயது). இவர் நேற்று சவாரி முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, மீதாப்பூர் பாலம் வழியாக செல்லும் போது தொங்கியபடி தாய் மற்றும் குழந்தை உயிருக்கு போராடியதை பார்த்துள்ளார். உடனே காப்பற்ற அருகில் விரைந்துள்ளார் எனினும் கை நழுவி அந்த பெண்ணும் குழந்தை ஆற்றிற்குள் விழுந்துள்ளனர். இதனையடுத்து, சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஆற்றிற்குள் குதித்து அவர்களை காப்பாற்றியுள்ளார். அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து அவர்களிடம் அந்த பெண் மற்றும் குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மேலும் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை தெடி வருகின்றனர்.
எதைப்பற்றியும் கவலை இல்லாமல் தன் நல இருந்தால் போதும் என்று சுயநலமாக வாழ்பவர்களுக்கு மத்தியில் தன் உயிரை பற்றியும் யோசிக்காமல் விரைந்து இரு உயிர்களை காப்பாற்றி ஆட்டோ ஓட்டுநரின் இறப்பு நிலை பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க