• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஐந்து வருட கல்வி செலவை ஏற்ற தனுஷ் ரசிகர்கள் !

July 28, 2020 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் நிழல் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் ஐந்து வருட கல்வி செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தனது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட தனுஷ் தலைமை மன்றம் சார்பாக இடையர்பாளையம் பகுதியில் உள்ள நிழல் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சுமார் இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஐந்து வருட கல்வி செலவை ஏற்றுள்ளனர். இந்நிலையில் இதற்கான முதல் ஆண்டிற்கான உதவி தொகையை வழங்கும் நிகழ்ச்சி நிழல் இல்லத்தின் முன்பாக நடைபெற்றது.

கோவை மாவட்ட தனுஷ் தலைமை மன்ற தலைவர் மணி,செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் நிழல் இல்லத்தின் நிர்வாகி சுதாவிடம் உதவி தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் அந்தோணி,பழனி குமார்,வினோத்குமார்,ராஜ் குமார்,வடக்கு நகர தலைவர் அருள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நிர்வாகிகள் பேசுகையில்,

தனுஷ் அவர்களின் பிறந்தநாளில் இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பிறந்த நாள் விழாவில் இது போன்ற பயனுள்ள உதவிகளை செய்ய மற்றவர்களும் முன் வரவேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்,நவீன் குமார், மணிகண்டன், ராஜேஷ் கண்ணா உட்பட கணபதி, சரவணம்பட்டி ,துடியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி, ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க