August 9, 2020
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் இரவு நேரத்தில் டிரோன் கேமராக்களை பறக்கவிட காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் சிறு முன்னோட்ட காட்சிகளை ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இரவு நேர டிரோன் கேமராக்கள் முதலில் சிங்காநல்லூர் பகுதியில் பறக்க விடப்பட உள்ளன. கோவையில் டிரவுசர் கும்பல் சிங்காநல்லூர் பகுதியில் அதிகமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அதில் ஒருவனை நேற்று சிங்காநல்லூர் போலீஸார் பிடித்தனர். எனவே சிங்காநல்லூர் பகுதியில் முதலில் இந்த டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட உள்ளது.