• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்தினம் கல்வி குழுமத்துடன் , மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 3, 2021 தண்டோரா குழு

இரத்தினம் கல்வி குழுமத்துடன் மாலிக்குலார் கனக்சன்ஸ் நிறுவனம்,உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போதே திறனாய்வை வளர்க்கும் விதமாகவும் மேலும் துறை சார்ந்த நடைமுறை பணி குறித்த அறிவை மேம்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களுடன் இரத்தினம் கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த மாலிக்குலார் கனக்சன்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம்,மற்றும் உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றுடன் இணைந்து இரத்தினம் கல்வி குழுமம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் பையெழுத்திடப்பட்டது.

இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் மதன்.ஆ. செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும்,முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே,உயிரியல் மற்றும் நானோதொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநர் முனைவர் R ரகுநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட உயிரி தொழில்நுட்பவியல் மையத்தை மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில்,இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாகி முனைவர், நித்தியானந்தம், முதல்வர் முனைவர்.பி.நாகராஜ் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.R.மாணிக்கம், முதல்வர் முனைவர் முரளிதரன், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை துறைத் தலைவர் பேராசிரியர் கீதா,கட்டிடவியல் துறைத் தலைவர் முனைவர் – கிருஷ்ண குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க