• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

இரட்டை கோபுர தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவுதினம்

September 11, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் 16வது நினைவு நாள் இன்று(செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் 2௦௦1ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்11 மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ்விமானம்ட் 175 என்னும் விமானம் மூலம் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களை தாக்கினர். இந்த தாக்குதலில் இரண்டு கோபுரங்களும் தரைமட்டம் ஆனது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்,பென்ஸில்வேனியா மற்றும் பெண்ட்டகன் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாகுதலில் சுமார் 3,௦௦௦க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க நாட்டில் நடந்த இந்த தீவிரவாத தாக்குதல் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தின் 16வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் சிறப்பு பிராத்தனைகளும்,இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க