October 5, 2017
தண்டோரா குழு
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தினகரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், மேலும், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இதுதொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் அளிக்கக் கோரியும்,
இரட்டை இலை விவகாரத்தில் முடிவு எடுக்க, 2018 பிப்.,28 வரை தேர்தல் ஆணையத்துக்கு காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தினகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.