June 1, 2017
தண்டோரா குழு
இரட்டை இலை சின்னத்தை மீட்போம், விரைவில் தேர்தல் நடக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க.புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இரு அணிகளும் இணையும் என அமைச்சர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் வெளிவர நீதி விசாரணை தேவை. எங்களது கோரிக்கையை ஏற்க பினாமி அரசு தவறி விட்டது. குடும்ப அரசியல் ஒடுக்கப்படும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றும்,எங்களது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்போம். விரைவில் தேர்தல் நடக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.