• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயற்கையோடு ஒருநாள் இணைந்து வாழும் திருநாள் ! – பரளிக்காட்டில் குவியும் மக்கள்

May 10, 2019 எம். அருண் குமார்

இயற்கையின் அழகும் அதன் முக்கியத்துவமும் தேவை ஏற்படும் போதுதான் நமக்கு புரியும். இயற்கை சீற்றத்தால் பல உயிர்கள் இம்மண்ணில் அழிந்தும் புதைந்தும் போன பல உண்மைகள் நமக்கு தெரியும். ஆனாலும் இயற்கை சில சமயங்களில் நமக்கு பேரின்பத்தை அள்ளித்தரும். அப்போது நாம் அதை அரவணைத்து இன்பம் கொள்ளவே நினைப்போம். இதற்கு நமது மேட்டுப்பாளையம், பரளிக்காடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“இந்த மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கின்றதே! எங்கேயாவது சென்று கோடை வெயிலை குதூகலித்து விட்டு வருவோம்,” என்று திட்டமிடும் அனைவருக்கும் மேட்டுப்பாளையத்தில் உள்ள, இயற்கையின் சிறப்பை நின்று கூறும் பரளிக்காடு ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருக்கின்றது. காரணம் இங்கு அமைந்துள்ள அகலமான நீரோட்டங்கள், அதிலே மெல்ல செல்லும் பரிசல் பயணம், சுற்றிலும் ஓங்கி நிற்கும் மலைகள், எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென மரங்கள் என இயற்கையின் ரம்மியம் காணப்படுவதே. இந்த இயற்கை அழகை கண்ட பலரும் மீண்டும் மீண்டும் இங்கே செல்கின்றனர்.

இங்கு வந்து மனம் துளைத்த பலரில் ஒருவரான கோவையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக பரளிக்காட்டிற்கு எனது குடும்பத்துடன் வந்து செல்கிறேன். பரளிக்காட்டிற்குள் நுழைந்தவுடன் சிறுது நேரம் ஓய்வு எடுக்கலாமா என்று நினைக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுக்கு கலந்த தேனீர் வழங்குகிறார்கள். அனைத்து சுற்றுலா பயணிகளும் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். இதுதான் அளவு என்று இல்லை. பயணிகள் அனைவரையும் முழுமையான நிறைவுடனே வைத்துக்கொள்கின்றனர். அதன் பிறகு இரும்பால் ஆன பரிசலில் மெதுவான ஆற்றுப்பயணம். அதில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் 360வீவ் உள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இங்கு வருபவர்களுக்கு உணவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. அந்த பயணத்திற்கு பிறகு உணவு நேரம் என பரிசல் ஓட்டுனரால் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மலைவாழ் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர் உணவுடன். “அடடா!! எத்தனை வகையான உணவுகள்” அங்குள்ள மலைவாழ் மக்களால் சமைக்கப்பட்டு, நேரடியாக அவர்களாலேயே பரிமாறப்படுகிறது.இவ்வாறு மலைவாழ் மக்கள் தரும் அன்பை சொல்ல வார்த்தையே இல்லை.இங்கு வருபவர்கள் அருகிலேயே ஆற்றில் குளித்துக்கொண்டு, உடை மாற்றும் அறை தனியாக உள்ளது. அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இதற்கு வழிகாட்டியாக ரேஞ்சர் எனப்படும் பாதுகாவலர் எப்போதும உடன் இருக்கிறார்.

உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே செல்லும் வரை அனைத்துப் பாதுகாப்புகளையும் அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துகொள்ள எச்சரிக்கை பலகைகளும், விலங்குகள் உள்ளே வராமல் ஆங்காங்கே இருக்க தடுப்புகளுமென பாதுகாப்புகள் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தனது ஒருநாளை இயற்கையோடு உறவாடி செல்ல நாம் ஆன்லைனில் மட்டுமே தரும் கட்டணத்தொகை 400ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை மட்டுமே. இந்த தொகை மலைவாழ் மக்களின் நலப்பணிக்காக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த இடத்தை போலவே பல சுற்றுலா தளங்கள் உள்ளது. அவற்றை அனைத்தையும் அரசே எடுத்து நடத்தி அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கையுடன் நிறைவு செய்தார் ராஜேந்திரன்.

இதுமட்டுமின்றி, 1500 ரூபாயில் இங்கு வந்து தங்கி இருந்து இயற்கையுடன் ஒருநாள் இருக்க விரும்புவோருக்கு ஏதுவாக விடுதிகள் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க