• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இப்படி ஒரு சர்வாதிகாரியான ஆட்சி இருக்கக்கூடாது – சூலூரில் கமல் பேச்சு

May 12, 2019 தண்டோரா குழு

இப்படி ஒரு சர்வாதிகாரியான ஆட்சி இருக்கக்கூடாது என்று நான் நினைப்பதுபோலவே மக்களும் நினைக்கிறார்கள் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கோவை சூலூர் இடைத்தேர்தலில் போட்யிடும் மநிம கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இருகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில்

பேசிய அவர், இப்போது நிலவும் இந்த அரசியல் அகற்ற்பபட வேண்டும் என எல்லாம் மனதிலும் தோன்றிவிட்டது.
இந்த தருனத்தில் தான் கால் எடுத்து வைத்துள்ளோம்பெரிய பெரிய கட்சிகளுக்கு இணையாக தோல் உறசும் வகையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.மற்றவர்கள் கெஞ்சி கூப்பிட்டு கூட்டம் சேர்கின்றனர்
உலக தமிழர்கள்
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்கள். எல்லோருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தோடு வந்தவர்கள்.
அரை நூற்றாண்டில் கண்டிராத எழுச்சி. அதன் பெரும் பங்காளிகளாக நீங்கள் இருக்கிறீர்கள்.
வானாளாவிய வாக்குறுதிகள் என்று எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. அவர்கள் செய்யத் தவறியதை செய்ய வேண்டியதை வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம்.உங்களுக்காக மட்டுமல்ல இவற்றையெல்லாம் செய்தே ஆகவேண்டும் என்று எங்களுக்குள் உறுதி கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமையகம் இருக்கும் அங்கே என் அலுவலகம் இருக்கும்.
ஒரு சமயத்தில் என் வீடு பறிபோக இருந்தபோது நான் பதறித்தான் போனேன். அப்போது பல வீட்டுச்சாவிகளை பத்திரத்தோடு எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு உலக நாயகன் என்று அழைக்கப்ப்படுக்கொண்டிருந்த நான் உங்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
இப்படி ஒரு சர்வாதிகாரியான ஆட்சி இருக்கக்கூடாது என்று நான் நினைப்பதுபோலவே மக்களும் நினைக்கிறார்கள்.இந்த வேட்பாளர் மாத ஊதியத்தை மக்களுக்காக செலவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். 2 ரூபாய் சம்பளம் கொடுங்கள் என்று அவர் கேட்கவில்லை.சம்பளத்தைக் கொடுங்கள் அதை மக்களுக்கு செலவிடுகிறேன் என்று சொல்லியுள்ளார்.இவருக்கு நிறைய லட்சியங்கள் இருக்கிறது அவற்றுள் முக்கியமானது ஆனை மலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவது.

இருநூற்றி சொச்சம் தொகுதிகளின் தேர்தலுக்கான ஒத்திகை தான் தற்போது நடைபெறும் தேர்தல்.
உங்களுக்கான மதிப்பை நீங்கள் உணருங்கள். உங்கள் பையிலிருந்து திருடிய பணத்தில் சில்லரையை தூக்கி எறிகிறார்கள்.அந்தப் பணத்தை வாங்கிவிட்டால் பின்பு உங்களால் கேள்வி கேட்க முடியாது, கேட்டால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள்.இவர்கள் எவ்வளவு திருடினார்கள் என்ற அசிங்க கணக்கை நாங்கள் சொல்லத் தேவை இல்லை. அவர்களே அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆசைக்கும் கமிஷனுக்காகவும் பசுமை வழிச்சாலையெல்லாம் நாங்கள் போடமாட்டோம்.டார்ச் லைட்டை உங்கள் வீட்டின் ஒளி விளக்காக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.நொய்யலாற்றைக் காப்பாற்ற அரசே எல்லாம் செய்துவிட முடியாது. கிராம பஞ்சாயத்தை வலிமைப்படுத்திக் கொண்டே வந்தால் சட்டம் உங்கள் கையில் இருக்கும் அவர்கள் கையில் இருக்காது. காந்தியார் இதைத்தான் செய்தார்..
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு கஜானாவை காலி செய்துவிட்டுப் போகப்போகிறார்கள்
அடுத்துவரும் ஆட்சியாளர்கள் எவ்வளவு நேர்மையானவர்களாக
இருந்தாலும் எவ்வளவு பாடுபட்டு அதை சரி செய்ய வேண்டும் தெரியுமா அவர்களை வீழ்த்த திட்டம் போடத் தேவை இல்லை அது ஓட்டைக் கப்பல் மூழ்கியே தீரும்.

மேலும் படிக்க