• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இப்படியும் ஒரு ரெஸ்டாரண்ட்.

April 23, 2016

நவீன கலாச்சாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகில் தினமும் புதிது புதிதாக பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். எப்போது புதுமையான அனுபவங்கள் கிடைக்கும் எனப் பலர் நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் சாப்பாடு விசயத்தில் சொல்லவே வேண்டாம் புதிது புதிதாகப் பல வித்தியாசமான ரெஸ்டாரண்டுகள் வந்து கொண்டுதான் உள்ளன.

பொதுவாக ரெஸ்டாரண்ட் என்றாலே நல்ல உடையணிந்து கொண்டு போவது தான் வழக்கம். ஆனால் லண்டனில் வரும் ஜுன் மாதம் புதிதாக “பான்படி“ என்ற இந்தி பெயரில் ஒரு ரெஸ்டாரண்ட் துவங்க உள்ளது. இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

இந்த ரெஸ்ட்டாரண்டிற்கு நீங்கள் நல்ல உடையணிந்து கொண்டு செல்லலாம். ஆனால், உள்ளே சென்ற பின் விருப்பம் இருந்தால் ஆடை இல்லாமல் அமர்ந்து சாப்பிடலாம். அதற்கான சிறப்பு வசதிகள் இந்த ரெஸ்டாரண்டில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தற்போது தயாராகி வரும் இந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைவதற்கு முன்பு தங்களது ஆடைகளைக் கழற்றி விட்டு, அங்குக் கொடுக்கப்படும் கவுன் அணிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மூங்கில் தடுப்பு அறைக்குள் சென்றவுடன் கதவை தாளிட்டுக் கொள்ளப் பூட்டும் வசதியும் வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த அறைக்குள் சென்றதும் தங்களது ஆடையைக் கலைந்துவிட்டும் இருக்கலாம் அல்லது கலையாமலும் இருக்கலாம். அது அவர்களது விருப்பம்.

இது தவிர மற்றொரு சிறப்பம்சமும் இந்த ரெஸ்டாரண்டில் உள்ளது. அங்கு இருக்கும் அறைக்குள் மின்சாரம் இருக்காது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் அமர வேண்டும். மேலும் இங்கு விறகுக் கட்டையில் சமைத்த உணவுகளை மண் பாத்திரத்தில் பரிமாறுவார்கள்.

ஆடையின்றி அமருபவர்களுக்கு என்று ஒரு இடமும், மற்றவர்களுக்கு ஒரு இடமும் இந்த ரெஸ்டாரண்டில் தனித்தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது.

இந்த ரெஸ்டாரண்ட் லண்டனில் எந்த இடத்தில் திறக்கப்படுகிறது என்ற தகவலை இதுவரை ரகசியமாகவே வைத்துள்ளார்கள். லண்டன் மாநகரமே இந்த ரெஸ்டாரண்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லாம்.

தற்போதுவரை இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த 13,000 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க