• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்க இயந்திரம்!

June 9, 2017 தண்டோரா குழு

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் மற்றும் போலியான ஃபாலோயர்களை பணம் கொடுத்து வாங்க வெண்டிங் இயந்திரம் ஒன்று ரஷ்யாவில் வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக கணக்குகள் வைத்திருக்கும் மக்களை பின்பற்றவும், அவர்கள் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக ரஷ்ய நாடு முழுவதும் உள்ள ஷாப்பிங் சென்டர்களில் வெண்டிங் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எடுத்த புகைப்படங்களுக்கு 1௦௦ போலியான இன்ஸ்டாகிராமி லைக்குக்ளை $A1.16 டாலர்களுக்கு பெறலாம். அதேபோல், $A2. 32 டாலர்களுக்கு 1௦௦ புதிய ஃபாலோயர்களை பெறமுடியும். இந்த இயந்திரம் மூலம் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை நேரடியாக பிரிண்ட் செய்தும் தருகிறது.

“ரஷ்யாவின் Snatap என்னும் நிறுவனம் தான் இந்த இயந்திரத்தை தயாரிக்க முக்கிய காரணம். $A325 டாலருக்கு இந்த இயந்திரத்தை வாடகைக்கு எடுக்க முடியும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தும்போது, வாடிக்கையாளர்களை தானாகவே சமூக வலைத்தளத்தில் சேர்த்து விடுகிறது.
அதோடு, வாடிக்கையாளர்களின் நண்பர்களுக்கு கோரிக்கைகளை அனுப்புகிறது.

எனவே, Snatap வாடிக்கையாளர்களுக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விளம்பரங்கள் அனுப்புவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது”.

மேலும் படிக்க