• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்று முதல் முறையாக கொண்டாடப்படும் ‘தமிழ்நாடு நாள்’

November 1, 2019 தண்டோரா குழு

தமிழக அரசு சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ முதல் முறையாக மாநிலம் முழுவதும் இன்று கொண்டாப்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது, மக்களின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் போதுதான் மாநில எல்லைகளுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என்று மத்திய அரசிடம் வாதிடப்பட்டது. இதற்காக குழு அமைக்கப்பட்டு, பல கட்ட ஆலோசனைகள் நடத்தி, 1956-ம் ஆண்டில், ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, 1956-ஆம் ஆண்டு இதே நாளில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.நவம்பர் 1-ம் தேதி ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது.தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகியவை நவம்பர் 1-ம் தேதியை நெடுங்காலமாக அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த நாள் முன்னர் கொண்டாடப்பட்டது இல்லை. காரணம்

1950-ம் ஆண்டில் மெட்ராஸ் ஸ்டேட் (அன்றைய தமிழ்நாட்டின் பெயர்) உருவாக்கப்பட்டது. ஆனால், அப்போது ஆந்திராவின் பல பகுதிகள், கேரளாவின் பல பகுதிகள் தமிழகத்தில் இருந்தன. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னரே, இந்த பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் சென்றன. இதற்கிடையில், அண்டை மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் தமிழ்நாடு நாள், நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நாளை கொண்டாட பத்து லட்சம் நிதியை ஒதுக்கி கடந்த 21-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வளர்ச்சித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில், ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது.கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை மற்றும் நுழைவாயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க