• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் அமலுக்கு வருகிறது வருமான வரி, சேமிப்பு, முதலீடு புதிய விதிகள்

April 1, 2019 தண்டோரா குழு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உள்ளிட்ட புதிய சலுகைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் தனிநபர் வருமான வரி விலக்கின் உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மாற்றப்பட்ட ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டி விகிதங்களும் இன்று நடைமுறைக்கு வருகிறது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை Project Insight என்ற ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுதிள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் உண்மையான வருவாய் மற்றும் வருமான வரி தாக்கலின்போது குறிப்பிடும் வருவாய் இடையே உள்ள வித்தியாசத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

ரியல் எஸ்டேட் :

புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆகவும் குறைந்த விலை வீடுகளுக்கு ஜிஎஸ்டி 1% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இனி கட்டுமானப் பணியைத் தொடங்கினால் குறைவான ஜிஎஸ்டியே விதிக்கப்படும்.

செபி விதிகள்

பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவண பங்குகள் ‘டீமேட்’ (Demat) எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மட்டுமே மாற்றப்படும் என செபி (SEBI) எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்தது.

விமான டிக்கெட்

விமானப் பயணத்துக்கான டிக்கெட் விலை அதிகமாகும். ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமான சேவை நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முடியாமல் உள்ளன.

கார் விலை

கார்களின் விலை சிறிதளவு உயரும். மகேந்திரா, டொயோட்டா, டாட்டா மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விலை உயர்த்தப்படுவதை அறிவித்துவிட்டன. தயாரிப்புச் செலவு அதிகமாவதால் விலை அதிகரிப்பதாகவும் காரணம் கூறியுள்ளன.

மேலும் படிக்க