May 27, 2017
தண்டோரா குழு
இன்று மாட்டிற்கு தடை போட்டவர்கள் நாளை மீனிற்கும் தடைபோடுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக மாடுகளை சந்தைகளில் விற்கப்படுவதை தடுக்க மத்திய அரசு மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவை நாம் தற்போது அனுமதித்தால் நாளை மீன் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கும் மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற செயல் மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும் என கூறியுள்ளார்.