• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்றுமுதல் ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் கார்டு செயல்படாது

January 1, 2019 தண்டோரா குழு

இவிஎம் சிப்’ இல்லாமல் இருக்கும் ‘டெபிட் கார்டு’, ‘கிரெடிட் கார்டு’கள் இன்று முதல் வேலை செய்யாது. இந்த கார்டுகளை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ஸ்வைப்பிங் செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

2019ம் ஆண்டு முதல் ‘இவிஎம் சிப்’ பொருத்தப்பட்ட ‘டெபிட்’, ‘கிரெடிட் கார்டு’களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். ‘இவிஎம் சிப்’ என்பது யுரோ, மாஸ்டர்கார்டு அன்ட் விசா சிப் என்பதன் சுருக்கமாகும். இந்த புதிய ‘இவிஎம் சிப்’ வைத்த ‘டெபிட், கிரெடிட் கார்டு’கள் பழைய கார்டுகளைக் காட்டிலும் அதிகமான பாதுகாப்பானவே. கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்யும் போது கூடுதலாகப் பின் நம்பர் கேட்கும் என்பாதல், இதில் ஏமாற்று வேலைகள் செய்ய இயலாது.பழைய முறையிலான ‘மேக்னடிக் ஸ்டிரிப்’ வகை ‘டெபிட், கிரெடிட் கார்டு’களை மாற்ற வேண்டும். இந்த கார்டுகளை எளிதாக பிரதிஎடுத்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், அதற்குப் பதிலாக சிப் வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடுவாக 2018, டிசம்பர் 31-ம் தேதியாகவும் நிர்ணயித்தது.ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, நாட்டில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கும். இதற்காக வங்கிகள் ஏற்கனவே பல்வேறு முறை தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவிட்டன.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடித்தது. ஆதலால், ‘சிப்’ இல்லாத ‘டெபிட்’, ‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்களுக்கு அந்த கார்டு இயக்கத்தை அந்தந்த வங்கிகள் ஜனவரி 1-ம்(இன்று)தேதி முதல் நிறுத்தக்கூடும். இதனால், பழைய முறையிலான ‘மேக்னட்டிங் டெபிட், கிரெடிட் கார்டு’களை வைத்திருப்பவர்கள் ஏடிம் மையத்தில் பணம் எடுக்க முடியாது, ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாது. அதேசமயம், ஆன்-லைன் கணக்கு செயல்பாட்டில் இருக்கும்.

ஏற்கனவே, ஏடிஎம் டெபிட் கார்டுகளிலும், கிரெடிட் கார்டுகளிலும் சிப் வைக்கப்பட்டு இருந்தால், அதை மாற்றத்தேவையில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க