• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது – புதிய வசதி அறிமுகம்

November 1, 2019 தண்டோரா குழு

பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் செயலில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் இந்த செயலி மூலமே தற்போது நடந்து வருகிறது. அதற்கு ஏற்ப வாட்ஸ் அப் நிறுவனமும் பல்வேறு புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி இதற்கு முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது.தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“ஆண்ட்ராய்டு போன்களுக்காக ஃபிங்கர் பிரின்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் பயன்பாட்டாளர்கள் ஹேக்கர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிரிந்து சென்ற காதல் உறவுகளிடமிருந்து தங்களின் உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டச் ஐடி, ஃபேஸ் ஐடி வசதியை ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தினோம். தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக கைரேகை பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தால் போதும் இந்த வசதியைப் பெறலாம் என தெரிவித்துள்ளது.

எப்படி பிங்கர் லாக் செய்வது

செட்டிங்க்ஸுக்குச்சென்று, அக்கவுன்ட் பகுதியை க்ளிக் செய்து அதில் ப்ரவைசி என்பதை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத்தேர்வு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க இயலாது (tap Settings, go to Account, then Privacy and Fingerprint Lock. Turn on Unlock with fingerprint, and confirm your fingerprint)” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க