• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடத்தை பிடிக்கும் – தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்

November 23, 2020 தண்டோரா குழு

கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும்,அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார்.அவருக்கு முன்னால் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகனை சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும்,அனைவருக்கும் பொதுவாக இல்லாமல் எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி,பொது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக கூறிய அவர்,பாரபட்சம் காட்டுவதாலேயே,நேற்று நடைபெற்ற ஏர் கலப்பை யாத்திரையில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தெரிவித்தார்.மேலும்,காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை நாட்டு மக்கள் இன்னும் கட்சியை விரும்பி வருவதாகவும், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடத்தை பிடிக்கும்.தமிழகத்தில் தொகுதி குறித்த உடன்பாடுகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கபடவில்லை.பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களே விமர்சனம் செய்த குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான நேரம் என கூறிய அவர்,கருத்துக்கள் கூறுவது தவறில்லை என கூறிய அவர்,அதே நேரத்தில்,கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும்,அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் மாநில பொதுச் செயலாளர் செல்வம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் மற்றும் பச்சமுத்து சரவணகுமார் நடராஜ் ரங்கநாதன் மகேந்திரன் குணசேகரன் பரமசிவம் வீரகேரளம் மோகன்ராஜ் சுப்பு காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க