• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி கவலையில்லாமல் எங்கே வேண்டுமானாலும் பயணிக்கலாம் விரைவில் அறிமுகமாகிறது கூகுள் மேப்பின் தத்ரூப வழிகாட்டி !

February 11, 2019 தண்டோரா குழு

கூகுள் மேப்பின் ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற தத்ரூப வழிகாட்டி முறை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் தொழில் நுட்பம் பல விசயங்களை எளிமையாக்கி உள்ளது. வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து உணவை வரவழைத்து கொள்ளலாம். புதிய இடம் ஒன்றிற்கு செல்ல வேண்டுமெனில் அதற்கு என கூகுள் மேப் உதவியை பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வப்போது கூகுள் நிறுவனம் தேவைக்கு ஏற்ப சேவையை மேம்படுத்தி வருகிறது. அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட முன்னோட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் விரைவில் ஆக்மென்டட் ரியாலிட்டி பதிப்பில் அப்டேட் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அதில் கேம்களில் வருவது போன்று திரும்பும் திசை மிளிரும் வகையில் தென்படும்.

கேமராவை ஆன் செய்தபடியே பயணிக்கலாம் என்பதால் முன்னே செல்லும் வாகனத்துக்கும் தங்கள் வாகனத்துக்கும் சுமார் எத்தனை அடி இடைவெளி என கணித்துக் கூறும்.மேலும் போன் திரையில் மட்டுமே கவனம் செலுத்தி சாலையில் நடக்கக் கூடாது என அறிவுறுத்தும். மேலும் உரிய இடத்தை எட்டியதும் குறியிட்டுக் காட்டும் அந்த பதிப்பில், வழிநடத்திச் செல்ல பீட்சா மேன் போன்ற அனிமேசன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி அப்டேட் கூகுள் நிறுவனம் விரைவில் வெளியுட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க