• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்த வருடம் மின்கட்டணம் கண்டிப்பாக உயரும் – தமிழ்நாடு மின்சார வாரிய இன்ஜினியர் யூனியன்

February 4, 2021 தண்டோரா குழு

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய இன்ஜினியர் யூனியன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் கோவிந்தராஜன்,

தமிழக அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் என்பது தமிழ்நாடு மின் வாரியம் கடந்த 2010ஆம் ஆண்டு அரசு ஆணை 100 கீழ் பிரிக்கப்பட்டு இரண்டு நிறுவனங்கள் ஆக மாற்றப்பட்டது. மின்வாரியத்தின் சொத்துக்களும் கடன்களும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் பணியாளர்களுக்கு மட்டும் மாற்றத்திற்கான உத்தரவு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே பணியாளர்களுக்கு உறுதி அளிக்கின்ற வகையில் அவர்களது பணிநிலை ஓய்வு காலப் பலன்கள், ஓய்வூதியம், போன்றவற்றை உறுதி செய்திட தமிழக அரசு, மின் வாரியம் மற்றும் தொழிற் சங்கங்கள் மூன்றும் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மின் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்து கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் மின்சார வாரியம் பிரிக்கப்படும் முன் மின்சார சட்டம் 2003ல் அமல்படுத்திய பின்பு மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தனியார் மின் உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டு வரை இவர்களால் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மீண்டும் அரசு மின் வாரியத்தை தனியாருக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த நஷ்டத்தை ஈடு செய்கின்ற வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வாரியம் முடிவெடுத்துள்ளது. தேர்தல் காரணமாக மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மின் கட்டணம் கண்டிப்பாக உயரும் என்பதில் சந்தேகமே இல்லை. மின் கட்டண உயர்வு இருந்தாலும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பது கடந்தகால அனுபவமாக உள்ளது.

எனவே தனியார் மின் உற்பத்தியாளர்களை அப்புறப்படுத்திவிட்டு அரசு மின் உற்பத்தியாளர்களை பணியமர்த்தினால் மட்டுமே அரசு நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கும். மின்வாரியம் துவங்கப்பட்டதிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை அரசு எவ்வித நஷ்டத்தையும் சந்திக்க வில்லை. ஆனால் தனியாருக்கு கொடுத்தபிறகு மின் உற்பத்தியாளர்களால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் மின்வினியோகத்தையும் தனியாருக்கு கொடுப்பதை அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்து வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மின் கட்டண உயர்வால் வாரியத்திற்கு எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. வாரியத்தின் தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் அதுமட்டுமின்றி இதை நம்பி உள்ள மின்வாரிய தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவே அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தினை செயல்படுத்தி தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தினை அரசு உத்திரவாதத்துடன் நிறைவேற்ற வலியுறுத்தி நாளை மதுரையிலும் 11ஆம் தேதியன்று சென்னையிலும் 19ஆம் தேதியன்று விழுப்புரத்திலும் 20ஆம் தேதியன்று திருச்சியிலும் நுழைவாயில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க