April 2, 2021
தண்டோரா குழு
இந்து விரோதிகளுக்கு இந்துக்கள் ஒருங்கிணைந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம் அகில பாரத துறவியர் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தவத்திரு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கையையும், இந்து கலாச்சாரத்தையும், இந்துக்களின் வழிபாட்டு முறையையும், இந்து கோவில்களையும், இந்து கடவுள்களையும், இந்து கடவுளின் சிலைகளையும், இந்து பெண்களையும், தமிழ் கடவுள் முருகனையும்,கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் நாத்திகவாதிகளும், இந்து விரோத சக்திகளும் சில அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இழிவுபடுத்தி பேசி வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இது போன்ற இந்து விரோதிகளுக்கு இந்துக்கள் ஒருங்கிணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்து கோவில்களையும், இந்து கலாசாரத்தின் பண்பாட்டையும் பாதுகாக்கின்ற, ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டு இந்துக்களின் நலன் காக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்போம் என்றும் சாதி மறுப்பு திருமணத்திற்கு திமுக தலைவர் ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படும் என்பது தமிழகத்தில் சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று ஸ்டாலினுக்கு கண்டனத்தை அகில பாரத துறவியர் பேரவை சார்பாக
தெரிவித்தார்.
உடன் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்,இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, விசுவ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் சிவலிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா உள்பட பலர் இருந்தனர்.